தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் தற்போது கிடையாது

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் தற்போது கிடையாது

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் தற்போது கிடையாது


UPDATED : ஏப் 03, 2021 12:00 AM

ADDED : ஏப் 03, 2021 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2021 12:00 AM ADDED : ஏப் 03, 2021 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது முன்னுரிமை வழங்கப்படும் காரணத்தால் பலர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு இடையே தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்புகளை தனியார் வணிகவியல் நிலையங்களில் பயின்று வருகின்றனர்.
இந்த படிப்புகளுக்கு தொழிநுட்ப கல்வி இயக்கம் சார்பாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் வணிகவியல் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்த நிலையில், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்புகாரணமாக தள்ளிவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us