தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு கல்லுாரி விரிவுரையாளர்கள்


UPDATED : ஏப் 10, 2021 12:00 AM

ADDED : ஏப் 10, 2021 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2021 12:00 AM ADDED : ஏப் 10, 2021 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள திருவள்ளுவர் அரசு கல்லுாரியில் 60க்கும் மேற்பட்ட பகுதி நேர கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கல்லுாரி முதல்வர் நாகலட்சுமி அதிகாரிகளிடம் பேசி, நிலுவை சம்பளம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று கவுரவ விரிவுரையாளர்கள் பகல் 1:30 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us