தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கீதம் அவமதிப்பு: ஐ.ஐ.டி.,யில் சர்ச்சை

தேசிய கீதம் அவமதிப்பு: ஐ.ஐ.டி.,யில் சர்ச்சை

தேசிய கீதம் அவமதிப்பு: ஐ.ஐ.டி.,யில் சர்ச்சை


UPDATED : ஏப் 28, 2021 12:00 AM

ADDED : ஏப் 28, 2021 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2021 12:00 AM ADDED : ஏப் 28, 2021 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
காரக்பூர் ஐ.ஐ.டி., ஆசிரியை ஒருவர், தேசிய கீதத்தை அவமதித்த மாணவர்களை திட்டி, &'ஆன்லைன்&' வகுப்பில் இருந்து வெளியேற்றிய காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ஆசிரியை மீது, மாணவர்கள் புகார் அளித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
&'ஆன்லைன்&'

இங்கு, காரக்பூர் தொழில்நுட்ப மையத்தில், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஓராண்டு துவக்க நிலை பயிற்சிக்கான, &'ஆன்லைன்&' வகுப்பு நடந்தது. இதில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். பாடம் துவங்குவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் எழுந்து நிற்காமல், தேசிய கீதத்தை அவமதித்துஉள்ளதாக கூறப்படுகிறது. 
இதனால் கடுப்பான ஆசிரியை, &'குறைந்தபட்சம் இந்த நாட்டிற்காக நீங்கள் செய்யக் கூடியது, தேசிய கீதத்திற்கு இரு நிமிடங்கள் மரியாதை செலுத்துவது தான். &'அதை செய்யாமல், &'பாரத் மாதா கீ ஜெய்&' எனவும் கூறாமல், இந்தியன் என சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா?&' என, கேட்டுள்ளார். அத்துடன், ஒரு கொச்சையான வார்த்தையில் திட்டி, மாணவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றி உள்ளார். 
சமூக வலைதளம் இதை மாணவர்கள், &'வீடியோ&' எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அதில், அந்த ஆசிரியை, &'என் மீது சிறுபான்மையினர் நலத் துறை, கல்வி அமைச்சகம் உட்பட எங்கு வேண்டுமென்றாலும் புகார் கொடுங்கள்; கவலையில்லை&' என, கூறுவதும் இடம் பெற்றுள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில், காரக்பூர் ஐ.ஐ.டி., நிர்வாகம், விசாரணை குழுவை அமைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us