தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இஸ்கான் இலவச வகுப்பு: முன்பதிவுகள் வரவேற்பு

இஸ்கான் இலவச வகுப்பு: முன்பதிவுகள் வரவேற்பு

இஸ்கான் இலவச வகுப்பு: முன்பதிவுகள் வரவேற்பு


UPDATED : ஏப் 30, 2021 12:00 AM

ADDED : ஏப் 30, 2021 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2021 12:00 AM ADDED : ஏப் 30, 2021 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இஸ்கான் சார்பில் &'பக்தி மண்டலம்&' எனும் பெயரிலான இலவச&'ஆன்-லைன்&' கோடை கால முகாம் மே 3ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
&'இஸ்கான்&' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சென்னை பிரிவு சார்பில் 6 முதல் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு&' பக்தி மண்டலம்&' எனும் தலைப்பிலான இலவச &'ஆன்-லைன்&' நிகழ்ச்சி துவக்கப்படுகிறது. இதில் ஸ்லோகம், பஜன், ஓவியம், பெயின்டிங், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவை 20 பேருக்கு ஒரு ஆசான் என்ற அடிப்படையில் போதிக்கப்பட உள்ளன.
அதேபோல 13 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு சப்த ரிஷிகள் ஆச்சாரியார்கள் குறித்து போதிப்பதோடு குழு கலந்துரையாடல் விவாதமும் நடக்கிறது. முதல் வகுப்பு மே 3ம் தேதி துவங்கி 14ம் தேதி வரையும் இரண்டாம் வகுப்பு மே 17ல் துவங்கி 28ம் தேதி வரையும் நடக்கிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள சிறார்கள் iskconchennai.org/summercamp வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என &'இஸ்கான்&' தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us