UPDATED : மே 02, 2021 12:00 AM
ADDED : மே 02, 2021 09:38 PM
மணவாள நகர்;
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் நடந்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடம்பத்துார் ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், அரசு பள்ளியில், 6 முதல், பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டிகள், கடந்த மாதம் நடந்தன.
போட்டியில் வெற்ற பெறும் மாணவர்களுக்கு, 7,000 ரூபாய் மதிப்புள்ள மினி டேப், 4,000 மதிப்புள்ள &'ஆன்ட்ராய்டு&' மொபைல் போன், 1,000 ரூபாய் மதிப்புள்ள &'கால்குலேட்டர்&' என, மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
மணவாள நகர், கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில், பரிசளிப்பு விழா, தலைமை ஆசிரியர் சா.ஞானசேகரன் தலைமையில் நடந்தது. 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற, 10ம் வகுப்பு மாணவியரான, மணவாள நகர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி எஸ்.கிரிஜா முதல் பரிசும், கே.ஈ.என்.சி., மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெய்த்தான்பீவிக்கு, 2ம் பரிசும், மேல்நல்லாத்துார் உயர்நிலைப் பள்ளி யுவஸ்ரீக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
இதேபோல், 6 - 9 வரை நடந்த போட்டியில், வெங்கத்துார், வெங்கத்துார் கண்டிகை நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவியருக்கு முதல் பரிசும், மூன்றாம் பரிசும், கீழ்நல்லாத்துார் நடுநிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவிக்கு, இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டன. இதேபோல், திருத்தணி கல்வி மாவட்டத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் வழங்கினார்.
