தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் மூடல்: பிள்ளைகள் மனஅழுத்தத்தால் பாதிப்பு

பள்ளிகள் மூடல்: பிள்ளைகள் மனஅழுத்தத்தால் பாதிப்பு

பள்ளிகள் மூடல்: பிள்ளைகள் மனஅழுத்தத்தால் பாதிப்பு


UPDATED : மே 20, 2021 12:00 AM

ADDED : மே 20, 2021 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2021 12:00 AM ADDED : மே 20, 2021 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கொரோனாவால் குடும்பங்களில் நடக்கும் இறப்புகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால், பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க, &'நிமான்ஸ்&' முன் வந்துள்ளது.
கொரோனாவால், சிறு பிள்ளைகள், இளம் தலைமுறையினரின் மனம் பாதிப்படைந்துள்ளது. வீடுகளில் கொரோனா இறப்புகளாலும், பள்ளி, கல்லுாரிகள் பல மாதங்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இவர்களின் நலனுக்காக, சிறப்பு கவுன்சலிங் சேவையை, நிமான்ஸ் துவங்கியுள்ளது. 

நிமான்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

ஏற்கனவே நிமான்ஸ் சார்பில் &'1098&' எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மன அழுத்துக்கு ஆளான பிள்ளைகளின் பெற்றோர், இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளிடம் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்தால், அழைப்பு சிறப்பு கவுன்சலிங் பிரிவுக்கு மாற்றப்படும்.அப்பிரிவின் வல்லுனர்கள், பிள்ளைகளுடன் பேசி, அவர்களின் வலியை தெரிந்து கொண்டு, கவுன்சலிங் கொடுப்பர்.
கொரோனா இரண்டாவது அலை, 18 வயது முதல், 45 வயது வரையிலானவர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வயதினர் அதிகம் இறக்கின்றனர். பிள்ளைகள் பலர், தங்களின் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்கள் சரியாக உணவருந்துவதில்லை, உறங்குவதில்லை.ஓராண்டாக பள்ளிகள் நடக்கவில்லை. கொரோனா பயத்தால், பெற்றோர் தங்களின் பிள்ளைகளை, வெளியே அனுப்புவதில்லை. நான்கு சுவர்களின் மத்தியில் இருக்கும் பிள்ளைகள், மந்தமாகின்றனர். 
இதிலிருந்து அவர்களை மீட்க, கவுன்சலிங் உதவியாக இருக்கும்.நிமான்ஸ் மருத்துவமனைக்கு, நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்து, அழைப்பு வருகிறது. எனவே அனைத்து மொழிகளிலும், கவுன்சலிங் தரப்படுகிறது. தினம் 24 மணி நேரமும், கவுன்சலிங் சேவை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us