தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பில்., மாணவி தேர்ச்சி: ஐகோர்ட் உத்தரவு

எம்.பில்., மாணவி தேர்ச்சி: ஐகோர்ட் உத்தரவு

எம்.பில்., மாணவி தேர்ச்சி: ஐகோர்ட் உத்தரவு


UPDATED : நவ 12, 2009 12:00 AM

ADDED : நவ 12, 2009 12:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2009 12:00 AM ADDED : நவ 12, 2009 12:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானலை சேர்ந்த ரேஷ்மி தாக்கல் செய்த ரிட் மனு:நான் அன்னை தெரசா பல்கலையில் எம்.பில்.,(தகவல் தொடர்பு) படித்தேன். 2004ல் நடந்த தேர்வை எழுதினேன்.


பெண்ணீயம் மற்றும் பெண்கள் இயக்கம் குறித்த தேர்வில் புறமதிப்பீட்டு தேர்வில் 75 க்கு 33 மதிப்பெண், அகமதிப்பீட்டுத் தேர்வில் 25க்கு 22 மதிப்பெண் பெற்றேன். மொத்தம் 55 மதிப்பெண் பெற்றேன். இருப்பினும் என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கவில்லை. இதுகுறித்து கேட்ட போது அக, புறமதிப்பீட்டு தேர்வுகளில் 50 சதவீதம் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.


ஆனால் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பல்கலை குறிப்பேட்டில் அதை குறிப்பிட வில்லை. என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப் பட்டது. நீதிபதி டி.முருகேசன், அக, புறமதிப்பீட்டுத் தேர்வுகளில் தனித்தனியாக 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.


மேலும் கல்வி விஷயங்களில் கோர்ட் உடனடியாக தலையீட முடியாது. அதை பல்கலை தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், மதிப்பெண்கள் குறித்து சான்றிதழிலும், பல்கலை குறிப்பேட்டிலும் குறிப்பிடாததால் மனுதாரர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உரிமை உள்ளது. அவரை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us