UPDATED : ஜூன் 05, 2021 12:00 AM
ADDED : ஜூன் 05, 2021 01:28 PM
கோவை:
சி.பி.எஸ்.இ., பிளஸ்2 தேர்வு எழுதவிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களின்பெற்றோர்களுடன், வீடியோ கான்பரன்ஸ்மூலம் கடந்த, 3ம் தேதி,பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதில், கோவை நேஷனல் மாடல் பள்ளியை சேர்ந்த மாணவர் சித்ராகர் தேப்ரக், பங்கேற்று பிரதமருடன் உரையாடினார்.
சித்ராகர் தேப்ரக் கூறுகையில், &'&'இச்சமயத்தில் மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என, பிரதமர் பேசினார். நான் பிரதமரிடம், &'பொதுத் தேர்வு ரத்தாகும் என்று எதிர்பார்த்திருந்தேன். தற்போது என்னுடைய கவனம் முழுவதும் போட்டித் தேர்வுகளை நோக்கியே உள்ளது. அதற்காக நான் என்னை தயார்படுத்தி வருகிறேன்&' என்று தெரிவித்தேன்,&'&' என்றார்.
நேஷனல் மாடல்பள்ளி முதல்வர்கீதா கூறுகையில், &'&'பொதுத் தேர்வு ரத்தால், பொதுத்தேர்வு தேதி மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதுவது, ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தல் போன்றவை குறித்து, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது,&'&' என்றார்.
