தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை ஈர்க்கும் கலை அறிவியல் படிப்புகள்

மாணவர்களை ஈர்க்கும் கலை அறிவியல் படிப்புகள்

மாணவர்களை ஈர்க்கும் கலை அறிவியல் படிப்புகள்


UPDATED : ஜூன் 16, 2021 12:00 AM

ADDED : ஜூன் 17, 2021 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2021 12:00 AM ADDED : ஜூன் 17, 2021 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான மாணவர்கள் என அனைவருக்கும், வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன.
தொழில்நுட்ப படிப்புகளுக்கு நிகராக கலை, அறிவியல் படிப்புகளுக்கும் மவுசு அதிகரித்துள்ளது. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., என்ற பிரிவுகளில், 80க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. 
பி.ஏ., ஆங்கிலம், தமிழ், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், சுற்றுலாத்துறை, இதழியல், அயல் மொழிகள்; பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் மீடியா, நியூட்ரிஷன், பேஷன் டிசைனிங், விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன், சைக்காலஜி, புள்ளியியல், பயோ-டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.காம் சி.எஸ்., ஐ.பி.எம்., பி.பி.ஏ., என இளநிலையில், ஏராளமான படிப்புகள் உள்ளன.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மற்றும் கல்வியாளர் பொன்னுசாமி கூறியதாவது:

மாணவர்கள் தங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப துறையை தேர்வு செய்யலாம். அறிவியல் படித்த மாணவர்கள், வணிகவியலில் ஒரு சில படிப்புகளை தவிர, பிற படிப்புகளில் சேர இயலும். கலை பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் அறிவியல் பிரிவில் சேர இயலாது. ஒவ்வொரு துறைக்கும் ஏற்றாற்போல, வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
தொழில்நிறுவனங்கள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், விற்பனை நிலையங்கள், வணிக தளங்கள் என, அனைத்திலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. எந்த துறையை தேர்வு செய்தாலும், மாணவர்கள் கட்டாயம் தனித்திறன் மேம்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

புதிய பாடப்பிரிவுகள்

நடப்பாண்டில், பி.எஸ்.சி., ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், பாரன்சிக் சயின்ஸ், ஆக்மென்ட் ரியாலிட்டி, விருச்சுவல் ரியாலிட்டி, கிராபிக் டிசைனிங் உள்ளிட்ட புதிய படிப்புகள் பல்வேறு கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள தொழில்நுட்பமாற்றங்களுக்கு ஏற்ப, இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் சேர்க்கை

கல்லுாரிகளின் இணையதளத்தை பார்த்து என்ன பாடப்பிரிவுகள் உள்ளன, கல்வித்தகுதி என்ன, கட்டண விபரங்களை அறிந்துகொண்டு தற்போது பதிவு பணிகளை மேற்கொள்ளவேண்டும். இளநிலை சேரும் மாணவர்கள், மேற்கொண்டு உயர்கல்வி படிக்கவேண்டுமா, வேலைக்கு செல்லவேண்டுமா, தொழில் துவங்கவேண்டுமா என்பதை திட்டமிட்டு அதற்கேற்ப துறைகளை தேர்வு செய்யவேண்டும்.
எதிர்காலத்தில், மாணவர்களின் தனித்திறன் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டு, வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை நினைவில் வைத்து, கிடைக்கும் நேரத்தில், &'ஆன்லைன்&' சான்றிதழ் படிப்புகள், திறன் மேம்பாடு பயிற்சிகளில் ஈடுபடவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us