தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெட்வொர்க் பிரச்னையை தீர்வு காண முயற்சி

நெட்வொர்க் பிரச்னையை தீர்வு காண முயற்சி

நெட்வொர்க் பிரச்னையை தீர்வு காண முயற்சி


UPDATED : ஜூலை 05, 2021 12:00 AM

ADDED : ஜூலை 05, 2021 09:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2021 12:00 AM ADDED : ஜூலை 05, 2021 09:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடகு:
ஆன்லைன் வகுப்புகளுக்கான நெட்வொர்க் பிரச்னையை தீர்வு காண, மூங்கில் வீடு அமைத்து, குடகை சேர்ந்த ஆசிரியர் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் துவங்கினாலும், மாணவர்களுக்கு &'நெட்வொர்க்&' கிடைக்காமல் வகுப்புகளை கவனிக்க முடியாமல் தொடர்ந்து சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிராமப் பகுதியிலுள்ள மாணவர்கள், நெட்வொர்க் சேவையை தேடி செல்ல வேண்டியுள்ளது. இந்த பிரச்னைகளை புதிய முறையில் தீர்வு காண முயற்சித்துள்ளார், குடகைச் சேர்ந்த ஆசிரியர் சதீஷா. இவர், குடகு மாவட்டம் முள்ளூர் கிராம அரசு துவக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். 
நெட்வொர்க் பிரச்னையால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தடைபடாமல் இருப்பதற்கு, முள்ளூர் கிராமப்பகுதியில் மரத்தின் மீது மூங்கில் வீடு கட்டி, அங்கிருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார். மேலும், அப்பகுதியில் நெட்வொர்க் கிடைக்காமல் இருக்கும் மாணவர்களும், அந்த மூங்கில் வீட்டை பயன்படுத்திக்கொள்ள உதவி செய்கிறார்.

ஆசிரியர் கூறியதாவது:

நெட்வொர்க் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கும், இயற்கை சூழலில் பாடம் நடத்துவதற்கும் இந்த ஏற்பாட்டை செய்தோம்.&'வாட்ச் டவர்&' அமைப்பதுபோல குறிப்பிட்ட உயரத்தில் மூங்கிலால் சிறிய அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புக்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வகுப்புகள் தடைபடாமல் உள்ளது. சில மாணவர்களுக்கு மொபைல் இல்லாதது பிரச்னையாக உள்ளது. நண்பர்களின் உதவியுடன், அவர்களுக்கும் மொபைல் போன் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us