தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டு பொதுத் தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

இரண்டு பொதுத் தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்

இரண்டு பொதுத் தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்


UPDATED : ஜூலை 06, 2021 12:00 AM

ADDED : ஜூலை 06, 2021 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2021 12:00 AM ADDED : ஜூலை 06, 2021 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு மற்றும் இந்தாண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்தாண்டு சில பாடங்களுக்கும் இந்தாண்டு அனைத்து பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து 2021 - 2022 கல்வியாண்டில் புதிய முறையில் தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அதன் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். &'டெர்ம் 1&' மற்றும் &'டெர்ம் 2&' என இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும். தலா 50 மதிப்பெண்களுக்கு இந்த இரண்டு பருவத் தேர்வுகளும் நடத்தப்படும். அதற்கேற்ப பாடத் திட்டங்களும் இரண்டாக பிரிக்கப்படும்.
தலா 90 நிமிடங்கள் அடங்கியதாக தேர்வுகள் இருக்கும். இதற்கான கேள்வித் தாள் மற்றும் மதிப்பிடும் முறை குறித்த விபரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இரண்டு பருவத் தேர்வுகளின் அடிப்படையில் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
நவ. - டிச.ல் முதல் பருவத் தேர்வும் அடுத்தாண்டு மார்ச் - ஏப். மாதங்களில் இரண்டாம் பருவத் தேர்வும் நடக்கும். முதல் பருவத் தேர்வு கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் இருக்கும்.மாணவரின் திறமைகளை திறன்களை மதிப்பிடும் வகையில் பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதற்காக மாணவர் குறித்த தகவல்கள் கல்வியாண்டு துவக்கத்திலேயே பெறப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக தகவல்கள் சேகரிக்கப்படும்.
சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் மாணவரின் மதிப்பீட்டு மதிப்பெண்களை பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும். அதுபோலவே 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று இடைத் தேர்வுகளுடன் பாடங்களை அவர்கள் கவனிக்கும் திறமையும் பரிசோதிக்கப்படும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத் தலைப்புக்கு பிறகும் பாடத்தை கவனிக்கும் திறன் செய்முறை தேர்வு போன்றவற்றுக்கு பள்ளி அளவில் உள்மதிப்பீடு செய்யப்படும்.
மாதிரி மதிப்பிடல் முறை கேள்வி வங்கி ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்றவற்றுக்கான வழிமுறைகள் தேவையான தகவல்களை பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. வழங்கும். அடுத்த அறிவிப்பு வரும் வரை &'ஆன்லைன்&' வாயிலாகவே வகுப்புகள் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us