தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கபில்தேவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்

கபில்தேவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்

கபில்தேவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, மதுரவாயலில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா, வேலப்பன் சாவடி ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.

புதுடெல்லி இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை, பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு, பல்கலைக் கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்து பேசினார்.

நிகழ்ச்சியில் இணைவேந்தர் அருண்குமார், துணைவேந்தர் பத்மநாபன், செயலர் ரவிகுமார், துணைத் தலைவர்கள் ராம வாசகம், மனோகரன், செயல் இயக்குனர் கோதண்டன், டீன் கலியபெருமாள், பதிவாளர் தினகரன், கூடுதல் பதிவாளர் பழனிவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் ஏவுகணை விஞ் ஞானி விஜய்குமார் சரஸ்வத், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ், கல்வியாளர் சத்தா, திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் நான்கு பிஎச்.டி., மாணவர்கள், 289  முதுகலை மாணவர்கள், 1,058 இளங்கலை மாணவர் களுக்கு பட்டம் வழங்கப் பட்டது.

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை பேசும் போது, இன்று நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம், சந்திரயான் ஏவுகணையை விண்ணுக்கு ஏவிய முதலாம் ஆண்டு நிறைவு நாள் ஆகிய சிறப்புகளுடன் இந்த பட்டமளிப்பு விழாவும் இணைந்துள்ளது.

சந்திரயான் மூலம் நாம், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்பதை கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்துள்ளோம். இந்த பல்கலைக்கழக மாணவர்கள் பல்துறையிலும் சிறந்து விளங்கு கின்றனர். கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள  ஏவுகணை விஞ் ஞானி விஜய்குமார் சரஸ்வத், கிரிக்கெட் வீரர் கபில்தேவ், சத்தா ஆகியோர் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியுள் ளனர். இது போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள், சாதனை படைக்க வேண்டும்&' என்றார்.

நிகழ்ச்சியில் பல்கலைக் கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் பேசும் போது, நான் கல்வித் துறையில் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆகிறது. தற்போது, 25 கல்வி நிலையங்களை நடத்தி வருகிறேன். என்னிடம் 25 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஐந்தாயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எங்கள் பல்கலைக் கழக மாணவர்கள் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இங்கு பட்டம் பெற்றவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

ஏவுகணை விஞ்ஞானி விஜய்குமார் சரஸ்வத் பேசும் போது, நாட்டு பாதுகாப்பிற் காக பல்வேறு ஏவுகணைகள், தொலை உணர்வு கருவிகள் போர் தளவாடங்கள் ஆகியவற்றை நாம் உருவாக்கி வருகிறோம். இது போல் நாடு முன் னேற்றத்திற்காக நீங்கள் ஒவ் வொருவரும் உங்களுக்குள் உள்ள திறமையை கண்டறிந்து, நாட்டு முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்றார்.

விழாவில் கபில்தேவ் பேசும் போது, விளையாட்டு வீரன் பேசக் கூடாது, செயல்பட வேண்டும். ஆனாலும் இங்கு சிலவற்றை பேச ஆசைப்படுகிறேன். சிறிய வயதில் என் பெற்றோர், நான் நன்கு படித்து டாக்டராகவோ, வக்கீலாகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டனர். ஆனால், இன்று எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்னை இந்த பல்கலைக்கழகம் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். இங்கு நான் விளையாடிய போட்டிகள் அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளேன். எனது சாதனைக்காக இந்த பட்டத்தை வழங்கியதாக கூறியுள்ளார்கள். மாணவ சமுதாயமாகிய நீங்களும் உங்கள் திறமையை செயலில் காட்டி பல்வேறு சிறப்புகளை பெற வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us