தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் மனு

மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் மனு

மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் மனு


UPDATED : ஜூலை 23, 2021 12:00 AM

ADDED : ஜூலை 23, 2021 12:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2021 12:00 AM ADDED : ஜூலை 23, 2021 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும்&' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் இளமாறன் தலைமையில் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து, தமிழகத்திற்கு தனி கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இலவசமாக்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில், போதிய கழிப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
நிரந்தர துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், நிரந்தரமாக குமாஸ்தா, இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும். அனைத்து வகை பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us