வனக்காவலர்களாக பெண்களை முதன்முறையாக நியமிக்க முடிவு
வனக்காவலர்களாக பெண்களை முதன்முறையாக நியமிக்க முடிவு
UPDATED : நவ 20, 2009 12:00 AM
ADDED : நவ 20, 2009 08:35 AM
அ நிறம் | அளவு
போலீஸ், தீயணைப்பு, விமான சேவை, ராணுவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், வனத்துறையில் பெண்கள் நியமனம் என்பது இல்லை. கேரளாவில் ரேஞ்சர் அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக வனத்துறையில், 170 ரேஞ்சர் பணியிடங்களில் பெண்களை நியமிக்க தற்போது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு செய்துள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில், ஏழு வனக்காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில், இரண்டு பணியிடங்களில் பெண்களை நியமிக்க மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி முடிவு செய்துள்ளார். விதவைகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சில தினங்களில் பணி நியமனம் வழங்கப்படவுள்ளது.
