தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிவி சீரியல் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்

டிவி சீரியல் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்

டிவி சீரியல் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்


UPDATED : நவ 21, 2009 12:00 AM

ADDED : நவ 21, 2009 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2009 12:00 AM ADDED : நவ 21, 2009 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பொது நூலகத்துறை சார்பில், 42வது தேசிய நூலக வார நிறைவு விழா, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.  மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது:


வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நூலகங்களில் கற்கலாம். ஒவ்வொரு நூலகமும் வாசகருக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் புத்தகங்களை பராமரிக்க வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சமூகத்தில் ஊக்குவிக்க வேண்டும். வாசிக்க நேரம் இல்லை என கூறி விட்டு, டிவி சீரியலை பார்த்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணர்த்த வேண்டும்.

புத்தகம் வாசிக்க தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். நூலகங்களுக்கு நல்ல பழைய புத்தகங்களை நன்கொடையாக அளிக்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் வெற்றி பெற நூலகங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு, அன்சுல் மிஸ்ரா பேசினார்.

மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் பேசுகையில், இன்று வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக பெரிய நாவல்களை படித்து முடிப்போம். இப்போது டிவி நம்மை சாப்பிடவும் விடுவதில்லை; படிக்கவும் விடுவதில்லை என்றார்.
 
தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி, 10 ஆயிரம் ரூபாயை நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இதற்கு முன் நூலகங்களுக்கு நன்கொடை வழங்கிய சிலருக்கு நூலக புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது. துணை மேயர் கார்த்திக், மாவட்ட நூலக அலுவலர் மனோகரன், வாசகர் வட்டத் தலைவர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us