தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேர்முகத்தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்: கனிமொழி எம்.பி.,

நேர்முகத்தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்: கனிமொழி எம்.பி.,

நேர்முகத்தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்: கனிமொழி எம்.பி.,


UPDATED : நவ 21, 2009 12:00 AM

ADDED : நவ 21, 2009 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2009 12:00 AM ADDED : நவ 21, 2009 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாளையொட்டி, கடலூர் மாவட்ட தி.மு.க., சார்பில், வடலூர் வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய வேலை வாய்ப்பு நேர்காணல் முகாமிற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.


முகாமை துவக்கி வைத்து கனிமொழி எம்.பி., பேசியதாவது: வேலைவாய்ப்பு முகாம் ஒன்றில் பகுதி, பகுதியாக பிரிக்க மாட்டார்கள். ஆனால், இங்கு ஏ, பி, சி என பிரித்து நடத்தப்படுகிறது. பெரிய கம்பெனிகளில் தான் வேலை கிடைக்க வேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது.


பெரிய நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் கூட வேறு பெயர்களில் இருக்கலாம். அதுபோன்ற கம்பெனிகளை சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. அவர்களை சென்று பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் சரியானவராக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும். முயற்சி செய்யுங்கள், தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளுங்கள்.சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால், தெரியவில்லை என ஒத்துக்கொள்ளுங்கள்.

தவறான பதிலை சொல்லாதீர். நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் எதிர்கொள்ளுங்கள். எங்கள் அழைப்பை ஏற்று, இங்கு வந்துள்ள உங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கு, எங்களுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.படித்துவிட்டு வந்திருக்கும் நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.


தி.மு.க.,வும், முதல்வர் கருணாநிதி போன்ற தலைவர்கள் விதைத்த விதை இன்று விருட்சமாகி உள்ளது. அதிலிருந்து தான் உங்களுக்கு பூக்களையும், பழங்களையும் பறித்துத் தந்துள்ளோம். இவ்வாறு கனிமொழி எம்.பி., பேசினார்.முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us