தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணையதளம் மூலம் கல்வி உதவித் தொகை

இணையதளம் மூலம் கல்வி உதவித் தொகை

இணையதளம் மூலம் கல்வி உதவித் தொகை


UPDATED : நவ 25, 2009 12:00 AM

ADDED : நவ 25, 2009 02:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2009 12:00 AM ADDED : நவ 25, 2009 02:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களை, மின் ஆளுமை மாவட்டங்களாக்கும் (இடிஸ்டிரிக்ட்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இதன்படி, திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அனைத்துப் பணிகளும் மத்திய அரசு உதவியுடன் கணினிமயமாக்கப்படுகிறது.


இத்துடன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் இணையதளம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.


தற்போதுள்ள நடைமுறைப்படி, தகுதியுள்ள மாணவர்களிடம் கல்லூரி முதல்வர்கள் விண்ணப்பங்களை பெற்று, அதை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்புகின்றனர். கல்வி நிறுவனங்களுக்கு காசோலைகள் அனுப்பப்படுகின்றன.


இம்முறையில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஆவதுடன், தங்களுக்கான தொகை எவ்வளவு, அந்த விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பது தெரியாமல் இருந்தது.


தற்போது, தேசிய தகவல் மையக் குழு இதற்கென மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் மாணவர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்களை இணையதளம் மூலமே கல்லூரி முதல்வர்கள் பதிவு செய்து, மாவட்ட பிற்பட்டோர் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு, இணையதளம் மூலமே விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


தங்களது விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது, யாரிடம் உள்ளது, எப்போது உதவித் தொகை கிடைக்கும், எவ்வளவு உதவித் தொகை என்ற விவரங்களை, மாணவர்கள் தாங்களாகவே, edistrict.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கல்வி உதவித் தொகையை இணையதளம் மூலம் வழங்கும் சேவையை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தனர்.


இதுகுறித்து, அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் கூறும்போது, இந்த வசதியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சமூகநலத் துறை ஆகியவற்றின் சேவைகளுக்கும் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்கும் அமல்படுத்துவோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us