தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை இதழியல் துறைக்கு ஸ்டுடியோ

சென்னை பல்கலை இதழியல் துறைக்கு ஸ்டுடியோ

சென்னை பல்கலை இதழியல் துறைக்கு ஸ்டுடியோ


UPDATED : நவ 26, 2009 12:00 AM

ADDED : நவ 26, 2009 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2009 12:00 AM ADDED : நவ 26, 2009 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதழியல் துறை மாணவர்களின் வசதிக்காக, 30 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகள் கொண்ட, ஸ்டுடியோ அமையவுள்ளது. அதற்கான பணிகள் அடுத்த வாரத்தில் துவக்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவ, மாணவியரின் சார்பில், முற்றம் என்ற நாடக குழு அமைக்கப்பட்டது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது.
 
இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ரவீந்திரன் வரவேற்றார். முற்றம் நாடக குழுவின் முதல் நிகழ்ச்சியை, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:
 
இந்த பல்கலைக் கழகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் சொந்தம் என்று இருக்கக் கூடாது. வீதியில் உள்ள சாதாரண மனிதர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் உரிமை உள்ளது என்ற வகையில் மனதை விரிவுபடுத்த வேண்டும். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுப்பதில்லை. கிராமியக் கலைஞர்களை அழைத்து வந்து நடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சி மூலம், பல்கலைக் கழகத்தின் கதவுகள் சாதாரண மக்களுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கற்பதை விட வெளி உலகிலும், கிராமங்களிலும் தான் அதிகம் கற்றுக் கொள்ள முடியும். எனக்கு அடித்தளம், நான் வாழ்ந்த குக்கிராமம். இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். படிப்பவர்கள் மூலம் சமுதாயம் மேம்பட வேண்டும்.
 
தற்போது, ஒழுக்க குறைவு அதிகரித்து வருகிறது. அதை வெளி உலகிற்கு புரிய வைக்கும் வகையில் மாணவர்கள் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை, தெருக்களில் நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதால் மாணவர்களுக்கும் சமூக அக்கறை உண்டு என்பதை புரிந்துக் கொள்வர். இதழியல் துறை மாணவர்களின் கல்வி வசதிக்காக, 30 லட்சம் ரூபாய் செலவில், ஸ்டுடியோ அமைக்கப்படவுள்ளது. இதில், 10 லட்சம் ரூபாய் யு.ஜி.சி., நிதியும், 20 லட்சம் ரூபாய் பல்கலைக் கழகமும் ஏற்கும். ஸ்டுடியோ அமைக்கும் பணிகள் அடுத்த வாரத்தில் துவக்கப் படும். அங்கு, வெள்ளித்திரை, சின்னத்திரை, பேட்டிகள் மற்றும் மீடியா பயிற்சிகள் போதிக்கப் படும். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
 
தமிழ் இலக்கிய துறையின் தலைவர் அரசு வாழ்த்திப் பேசுகையில்,
பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய துறை சார்பில், 1980ம் ஆண்டு முதல் நாடகக்குழு செயல்பட்டுவருகிறது. கானா பாடல்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயலாக்க துறை இல்லை. விரைவில் அத்துறை கொண்டு வரப்படவேண்டும் என்றார். நிகழ்ச்சியில், ஆதி தமிழர் கலைஞர்களின் கும்மியாட்டம், பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் விட்டில்கள் நாடகம், உரிமை மீறல் வீதி நாடகம், சென்னை, கானா
இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கூத்து கலைஞர்களின் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us