தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பங்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பங்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பங்கள் கிடைக்காமல் பலர் ஏமாற்றம்


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அடுத்தாண்டு ஏப்ரலில் குரூப் 2 தேர்வை டி.என்.பி..எஸ்.சி ., நடத்துகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் வழங்கப்படுகின்றன.


விலை முப்பது ரூபாய். மதுரையில் வடக்கு வெளி வீதி, தல்லாகுளம், அரசரடி தலைமை தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தினமும் 9.30 மணி முதல் குறைந்த அளவு விண்ணப்பங்களே விற்பனை செய்யப்படுவதால் காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வாங்குகின்றனர். சிறிது நேரத்தில் விண்ணப்பங்கள் காலியாகி விடுகிறது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

தல்லாகுளம் தபால் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் குறைந்தளவு விண்ணப்பங்களை சென்னையில் இருந்து வழங்குகிறது. எங்களிடம் இருக்கும் அனைத்து விண்ணப்பங்களையும் அன்றே வழங்கி விடுகிறோம். 20ம் தேதி 500, 21ம் தேதி 100, 23ல் 398, 24ல் 200, 25ல் 300, 26ல் 400 விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன என்றார்.

விண்ணப்பங்களை தபால் அலுவலகத்தில் விற்பதற்கு பதிலாக, தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் டவுண்லோடு செய்ய நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us