UPDATED : டிச 05, 2009 12:00 AM
ADDED : டிச 05, 2009 02:48 PM
அ நிறம் | அளவு
விதிமுறைகளை மீறி, பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட 100 வாகனங்களை பறிமுதல் செய்து, ஆயிரக்கணக்கில் அபராதமும் விதித்தனர். பள்ளி வேன்கள் குறித்து அடிக்கடி சோதனை நடத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி
வாகனங்கள், விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்றும், விதிமுறைகளை மீறி ஓடிக்கொண்டிருக்கும் பள்ளி வாகனங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், போலீசாரும் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.உத்தரவு
:இதையடுத்து, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் மணி, பள்ளி ஆய்வாளர்களுக்கு நேற்று உத்தரவு ஒன்று பிறப்பித் துள்ளார். அதில்,"தினமும் 5 மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும். மாணவர்களை ஏற்றி வரும் வாகனங்கள் லைசென்ஸ் பெற்றுள்ள விபரம், வாகனத்தின் தரம், மாணவர் களுக்கு வாகனத்தில் உள்ள வசதிகள், டிரைவர் அனுபவம், அவர் பெற்றுள்ள லைசென்ஸ் விபரம் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும். குறைகளை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் அறிக்கையை தினமும் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்&',என கூறியுள்ளார்.ரெய்டு
:இதன்படி,நேற்று காலை பள்ளி வேலை நேரம் துவங்கும் முன்பாகவே, மாநிலம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்களும், போலீசாரும் கைகோர்த்துக்கொண்டு, "ரெய்டில்&' இறங்கினர். தலைநகர் சென்னை முதல் அனைத்து மாவட்டங்களிலும், இந்த சோதனை நடந்தது. சாலைகளில் வந்த பள்ளி வாகனங்களை மடக்கிப் பிடித்து, வாகனங்களில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்கள் ஏற்றப் பட்டிருக்கிறார்களா, வாகனத்தின் நிலை ஆகியவை குறித்து போலீசாரும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் விசாரித்தனர்.நெல்லையில் ஆர்.டி.ஓ., பொன்செந்தில்நாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். பள்ளிவாகனங்கள் செயல்படுவது குறித்து சுப்ரீம் கோர்ட் 11 வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, குறைந் தது பத்துஆண்டுகள் வாகன ஓட்டிய அனுபவம் மிக்க டிரைவர், வாகனத்தில் உதவியாளர் ஒருவர் செல்வது போன்றவை உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், 15 பள்ளி வாகனங்கள் மீது வழக்குபோடப் பட்டன. 4 வாகனங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மீனம்பாக்கம் மண்டல போக்குவரத்து அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை, தென்சென்னை புறநகர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டது.இச்சோதனையில், பர்மிட் இல்லாமல், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற நான்கு கார்கள், இரண்டு ஆட்டோக்கள் உட்பட மேலும் இரண்டு வாகனங்கள், ஓவர் லோடு, தகுதிச் சான்றிதழ் பெறாத வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டன. அனைத்து வாகனங்களுக்கும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆறு பஸ்களும் சோதனையில் பிடிபட்டன. இந்த பஸ்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையை விட, அதிகமான மாணவர்களை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பஸ்களுக்கு தலா 2,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சம்பந்தபட்ட பள்ளியின் நிர்வாகிகள் அழைத்து எச்சரிக்கப்பட்டனர். வளசரவாக்கம் ஆர்.டி.ஓ., அலுவலக வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில், அளவுக்கு அதிகமாக மாணவர் களை ஏற்றிச் சென்ற நான்கு ஆட்டோக்கள் பிடிபட்டன. இதில், இரண்டு ஆட்டோக்களுக்கு, பர்மிட் இல்லை.
இதுபோல்
, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையை இரண்டு நாளில் நிறுத்தி விடாமல், தொடர்ந்து மேற்கொள்ளவும், பள்ளி வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.