தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘விளையாட்டில் ஆர்வம் காட்டினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்’

‘விளையாட்டில் ஆர்வம் காட்டினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்’

‘விளையாட்டில் ஆர்வம் காட்டினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்’


UPDATED : டிச 07, 2009 12:00 AM

ADDED : டிச 07, 2009 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2009 12:00 AM ADDED : டிச 07, 2009 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எத்திராஜ் மகளிர் கல்லூரி உடற்கல்வி துறை சார்பில் கருத்தரங்கு டிச. 7ம் தேதி நடந்தது.


கருத்தரங்கில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியநாதன் பங்கேற்று பேசுகையில், “விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது இல்லை என்ற தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. விளையாட்டில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் அதில் மட்டுமே முழு ஆர்வம் காட்டுவதால் இது நிகழலாம். ஆனால், ஒரு அந்த மாணவர் படிப்பிலும் ஆர்வம் காட்டினால், அதிலும் முதலிடம் பெறுவார். விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உடல், மனது மட்டும் வலுப்பெறுவதில்லை. அவர்களுடைய குணமும் சிறப்பானதாக இருக்கும்.


விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், பிறரை மரியாதையுடன் நடத்துபவர்களாகவும் இருப்பர். ஆரோக்கியத்துடன் அதிக நாள்கள் வாழ முடியும்.  தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணத் தெரிந்தவர்களாகவும் இருப்பர்” என்றார்.


கருத்தரங்கில் கல்லூரி தலைவர், முதல்வர், பேராசிரியர்கள் பல்வேறு கல்லூரி மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us