தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களுக்கு ஜாதி வித்தியாசமின்றி கல்வி: சேஷன்

இளைஞர்களுக்கு ஜாதி வித்தியாசமின்றி கல்வி: சேஷன்

இளைஞர்களுக்கு ஜாதி வித்தியாசமின்றி கல்வி: சேஷன்


UPDATED : டிச 11, 2009 12:00 AM

ADDED : டிச 11, 2009 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2009 12:00 AM ADDED : டிச 11, 2009 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரதிய வித்யாபவன் பொன் விழா மற்றும் கீழ்பாக்கம் கார்டன் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி 33வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் ராஜாஜியின் சிலையை முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் சேஷன் திறந்து வைத்தார்.

பாரதிய வித்யா பவன் பொன் விழா கட்டடத்தை, 25 லட்ச ரூபாய் செலவில், ராம்கோ குழும தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா கட்டி கொடுத்துள்ளார். அந்த கட்டடத்தை ராமசுப்பிரமணிய ராஜாவும், பள்ளி அறிவியல் துறை கட்டடத்தை முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியும் திறந்து வைத் தனர்.

விழாவில் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும், ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக குழு தலைவருமான கலாநிதி பேசுகையில், மாணவர்களுக்கு பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கற்று தருவதில், ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி முதன்மையாக திகழ்கிறது. இங்கு இந்த ஆண்டு, முதன்முறையாக எல்.கே.ஜி., சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தேசிய அளவில் பல விருதுகள் மற்றும் பதக்கங்களை பெற்று வருவது வரலாற்று சாதனையாக திகழ்கிறது என்றார்.

டி.என்.சேஷன் பேசுகையில், அரசியல்வாதியாக இல்லாமல் அரசியல் மேதையாகவே திகழ்ந்தவர் ராஜாஜி. அவர் குறையொன்றுமில்லை என்ற மிகச்சிறந்த பாடலை எழுதியவர். இது நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான் வேதனை.

உலகளவில், அதிக இளைஞர் களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இளைஞர்களுக்கு ஏழை, பணக்காரன், ஜாதிகள் வித்தியாசமின்றி கல்வியை வழங்குவது நமது கடமை. இளைஞர்களும் ஆட்டம், பாட்டத்தில் அதிக நாட்டம் செலுத்தக் கூடாது. ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்திற்கு சென்றுவந்துள்ளனர். இதோடு, அவர்கள் விட்டுவிடாமல் அடுத்து சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய் கிரகத்திற்கும்  செல்ல வேண்டும். ஐ.டி., துறையில் உள்ள பல்வேறு படிப்புகளையும் மாணவர்கள் கற்கவேண்டும்.

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் நல்லது மட்டுமின்றி கெட்டதும் நடக்க வாய்ப்புள்ளது. இதேநிலை தொடர்ந்தால் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றை இளைய தலைமுறையினர் மறந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.

ராம்கோ குழும தலைவர் ராமசுப்பிரமணியராஜா பேசுகையில், நல்ல பள்ளி இருந்தால், நல்ல மாணவர்கள் சேருவர். ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி இத்தனை ஆண்டுகளை கடந்து சாதித்து இருக்கிறது என்றால் அதன் அடிப்படை கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதுதான் காரணம் என்றார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் கலாசாரத்தை வளர்க்கும் சிறந்த பள்ளியாக ராஜாஜி வித்யாஸ்ரம் திகழ்வதை பெருமையோடு பாராட்டுகிறேன். தேசிய அளவில், அரசியல் மேதையாக திகழ்ந்தவர் ராஜாஜி என்றார்.

விழாவில், பள்ளியில் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவியருக்கு பதக்கம், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. முன்னதாக வயலின், வீணை, கடம், புல்லாங்குழல், கீ-போர்டு மூலம் பள்ளி மாணவ, மாணவியர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us