தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்துக்கு வரவேற்பு : முதல்வர் விளக்கம்

ஆங்கிலத்துக்கு வரவேற்பு : முதல்வர் விளக்கம்

ஆங்கிலத்துக்கு வரவேற்பு : முதல்வர் விளக்கம்


UPDATED : டிச 12, 2009 12:00 AM

ADDED : டிச 12, 2009 08:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2009 12:00 AM ADDED : டிச 12, 2009 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது அறிக்கை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கவுள்ள நிலையில், 1968ம் ஆண்டு ஜனவரியில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிய நிகழ்ச்சிகளை நினைவுகூர விரும்புகிறேன். மாநாட்டின் தொடக்கமாக, முதல் நாளில் உழைப்பாளர் சிலையும், அண்ணாதுரை சிலையும் திறந்துவைக்கப்பட்டது.

அதே நாளில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நான், ம.பொ.சிவஞானம் எழுதிய நூலை வெளியிட்டு பேசும்போது, தமிழகத்துக்கு தமிழா, ஆங்கிலமா என்பது, முடிவு எடுக்கப்பட்டுவிட்ட பிரச்னை. தமிழகத்தில் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாகத் தமிழ் தான் இருக்க வேண்டும் என்பது, தமிழக அரசின் குறிக்கோள். இதில் துளியும் மாற்றமில்லை.

தொடர்புமொழி என்கிற போது தான் இந்தியா, ஆங்கிலமா என்ற பிரச்னை எழுகிறது. தமிழக அரசு ஆங்கில மோகம் கொண்ட அரசல்ல என்பதையும், தமிழே அதன் குறிக்கோள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் வரை, பஞ்சாப் வரை, டில்லி வரை எது தொடர்பு மொழி என்றால் இந்தி எனப்படுகிறது.

நாமோ, அகில உலகத் தொடர்புக்கு ஆங்கிலமே என்கிறோம். ஆளுகின்ற மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; உலகத் தொடர்புக்காகவே அதை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டேன். அன்று நான் பேசிய இந்த கருத்து தான் இன்றளவும் நமது மொழிக் கொள்கையாகத் தொடர்ந்து வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us