தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சில்லறை வர்த்தகம் குறித்த சர்வதேச கருத்தரங்கு

சில்லறை வர்த்தகம் குறித்த சர்வதேச கருத்தரங்கு

சில்லறை வர்த்தகம் குறித்த சர்வதேச கருத்தரங்கு


UPDATED : டிச 23, 2009 12:00 AM

ADDED : டிச 23, 2009 02:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2009 12:00 AM ADDED : டிச 23, 2009 02:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரத்தை அடுத்த காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில், சில்லறை வர்த்தகம் குறித்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு துவங்கியது.


பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி பேசுகையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் படிக்காதவர்கள் பலர், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்; நகரங்களில் மேலாண்மை படித்தவர்களும், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.இதன் மூலம், இத்துறையை மேம்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்த பேண்டாலூன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதுல் டாக்லே பேசியதாவது:
 
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தின் மதிப்பு 17.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில்,பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு 3.75 லட்ச ரூபாய் மட்டுமே. வரும் 2015ம் ஆண்டில், சில்லறை வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 22.50 லட்ச கோடி ரூபாயாக உயரும்.பெரிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் தொழிலை மேம்படுத்த, நல்ல வாய்ப்புக்கள் உள்ளன.
 
சில்லறை வர்த்தகத்தின் தலைநகரான சென்னையில், இத் துறையை மேம்படுத்த வேண்டும். பொருளாதார பாதிப்பு ஏற்படும் போது, சில்லறை வர்த்தகமும் அதிகம் பாதிக்கப்பட்டது.சில நிறுவனங்கள் அதையும் சமாளித்து, வளர்ச்சி கண்டது. இதற்கு வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனங்கள் காட்டிய நேர்மை, நியாயம் தான் காரணம். இவ்வாறு அதுல் டாக்லே பேசினார்.
 
கருத்தரங்க சிடியை அதுல் டாக்லே வெளியிட, பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து பெற்றுக் கொண்டார். ஸ்கூப் ஆப் மேனேஜ் மென்ட் டீன் ஜெயஸ்ரீ சுரேஷ் உட்பட பலர், கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us