தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேலத்தில் பெருகும் டி.ஆர்.பி., பயிற்சி மையம்

சேலத்தில் பெருகும் டி.ஆர்.பி., பயிற்சி மையம்

சேலத்தில் பெருகும் டி.ஆர்.பி., பயிற்சி மையம்


UPDATED : டிச 24, 2009 12:00 AM

ADDED : டிச 24, 2009 02:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2009 12:00 AM ADDED : டிச 24, 2009 02:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஏராளமான புது பயிற்சி நிலையங்கள் உருவாகி வருகின்றன. ஒரு மாத பயிற்சிக்கு 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பயிற்சிக்கட்டணமாக வசூலித்து வரும் இம்மையங்களில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். தகுதியற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தும் இதுபோன்ற மையங்களில் மாணவர்கள் ஏமாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் 424 வட்டார வளமையங்களும், நான்காயிரத்து 239 குறுவளமையங்களும் உள்ளன. அவற்றில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுத்து வந்தனர்.

தற்போது இதில் காலியாக உள்ள 564 காலியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதற்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 18ம் தேதி வரை பெறப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மட்டுமே எப்போதும் இல்லாத அளவுக்கு ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அனைத்தும் தற்போது பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுவதால், சமீபத்தில் பி.எட்., முடித்த இளைஞர்கள் அனைவரும் போட்டித்தேர்வு எழுத மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். விண்ணப்பித்ததுடன் இல்லாமல், இத்தேர்வுக்காக பயிற்சி நிலையங்களிலும் சேர்ந்து தீவிர பயிற்சி எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையில் உள்ளனர்.

அதற்கென பயிற்சி அளிக்கும் ஓரிரண்டு மையங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாணவர்களை சேர்க்க முடியாததால், அனுபவம் இல்லாத மையமாக இருந்தாலும் அவற்றில் சேர மாணவர்கள் தயாராக உள்ளனர். அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில், புற்றீசல் போல் தற்காலிக பயிற்சி மையங்கள் ஏராளமாக உருவாகி வருகின்றன.

பயிற்சி மையங்களில் சேர அதிக போட்டி காணப்படுவதால், ஒவ்வொருவருக்கும் ஒரு மாத பயிற்சிக்கு 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். புதிதாக தோன்றியுள்ள பயிற்சி மையங்களில் பலவற்றில் போதிய தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அதனால், அவற்றில் சேரும் இளைஞர்கள் அதிக பணத்தையும் செலுத்தி ஏமாற்றத்தை சந்திக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த முறை அறிவிக்கப்பட்ட டி.ஆர்.பி., தேர்வுகளில் அதிக அளவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதனால் பயிற்சி மையங்களில் சேர்ந்து தீவிரமாக பயிற்சி எடுத்த பலரும் ஆசிரியர்களாக மாறினர். தற்போது தமிழகம் முழுவதும் 564 பணியிடங்களே நியமிக்கப்பட உள்ளன. ஆனால், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்தேர்வுக்கு போட்டி அதிகம் என்பதால், விண்ணப்பித்தவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக பணம் பிடுங்கும் கொள்கையுடன் தகுதியான ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பயிற்சி மையங்களை தேர்ந்தெடுத்தால், பின்னர் கவலைப்பட வேண்டியிருக்கும். கட்டணத்துக்கு உரிய தகுதியும், வழிகாட்டும் திறமையும் அம்மையங்களுக்கு உள்ளதா என்பதை ஆராய்ந்து சேர்ந்தால், ஏமாற்றத்தை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us