தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் கடன்

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் கடன்

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் கடன்


UPDATED : டிச 30, 2009 12:00 AM

ADDED : டிச 30, 2009 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2009 12:00 AM ADDED : டிச 30, 2009 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் விண்ணப்பித்த 461 தொழில் முனைவோருக்கான நேர்காணல், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் டிச. 29ம் தேதி நடந்தது.


விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்திய மாவட்ட தெரிவுக்குழுவினர், தகுதி வாய்ந்தவர்கள் மானியத்துடன் கடன் பெற, வங்கிகளுக்கு பரிந்துரைத்தனர். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ‘பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை கதர்கிராம தொழில்கள் ஆணையம் ஒருங்கிணைக்கிறது. கிராமப்புறங்களில் கதர்கிராம தொழில்கள் ஆணையம், கதர் கிராமத்தொழில் வாரியம் மற்றும் நகரப் புறங்களில் மாவட்ட தொழில் மையங்கள், இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.


புதிதாக தொழில் துவங்குவோருக்கு, உற்பத்தி பிரிவாக இருந்தால் 25 லட்சம் ரூபாய் வரையும், சேவை பிரிவாக இருந்தால் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர் பயிற்சி பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். தொழில் முனைவோர் பயிற்சி பெறுவோர், திட்ட அறிக்கை, பொருளாதார விபரங்கள், கட்டடம், இட வசதி, சாதி சான்றிதழ், கல்வி சான்று, இருப்பிட சான்று மற்றும் பயிற்சி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட தெரிவுக்குழு மூலமாக, விண்ணப்பதாரர்களுக்கு நேர் காணல் நடத்தி, தகுதி வாய்ந்தவர் களுக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்படும்.


தொழில் துவங்க தேவையான மொத்த திட்ட மதிப்பீட்டில், 90 முதல் 95 சதவீதம் வரை, வங்கிகள் கடன் வழங்குகின்றன. பொதுப் பிரிவில் உள்ள பயனாளிகள் 10 சதவீதமும், நலிவடைந்த பிரிவாக இருந்தால் ஐந்து சதவீதம் அளவுக்கும் சொந்த முதலீடு செய்திருக்க வேண்டும். மேலும், கிராமப்புற பொதுப் பிரிவை சேர்ந்த பயனாளிகளுக்கு 15 சதவீதம் வரையும், நலிவடைந்த, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளுக்கு 25 சதவீதம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. நகர்ப்புற பயனாளிகளில் பொது பிரிவினருக்கு 25 சதவீதமும், நலிவடைந்த பிரிவினருக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.


மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன் கூறியதாவது: வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், புதிதாக (கூட்டாக) தொழில் துவங்கும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 2009-10ம் ஆண்டுக்கு 1,558 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 157 தொழில் முனைவோருக்கு 24.53 கோடி ரூபாய் கடன் வழங்குவதென இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல்கட்டமாக, கடந்த ஆக., மாதம் நடந்த நேர்காணல் மூலமாக, 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், 142 தொழில் முனைவோருக்கு ஏழு கோடி ரூபாய் மானியத்தில், 25 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.


தற்போது நடக்கும் நேர்காணலில், கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்த 235 பேர்; கதர் கிராமத் தொழில் வாரியத்தில் விண்ணப்பித்திருந்த 95 பேர்; மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்திருந்த 131 பேர் என, 461 பேர் கலந்துகொண்டனர். தகுதி வாய்ந்த அனைவருக்கும் இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ்கள் அடிப்படையில், 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலான மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும், 100 சதவீதம் பேர் கூடுதலாக தொழில் வாய்ப்பு பெறுவர்.இவ்வாறு, முருகேசன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us