UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 11:02 AM
அ நிறம் | அளவு
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், யோகா தின நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சென்னை பல்கலை, நந்தனம் கலை, அறிவியல் கல்லுாரி, கேந்திரிய வித்யாலயா பள்ளி,ஐ.ஐ.டி., உள்பட பல பள்ளி, கல்லுாரிகளில், காலையில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு, யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும், மத்திய கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.
