தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சோதிக்கும் நெட் ஏமாற்றும் செட் தேர்வுகள்

சோதிக்கும் நெட் ஏமாற்றும் செட் தேர்வுகள்

சோதிக்கும் நெட் ஏமாற்றும் செட் தேர்வுகள்


UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM

ADDED : ஜூன் 22, 2023 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM ADDED : ஜூன் 22, 2023 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி., அல்லது நெட்/செட் தேர்வு முடித்திருக்க வேண்டும் என்பது யு.ஜி.சி., விதி. நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. 2018 முதல் இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதற்காக இத்தேர்தவை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) மாவட்டங்கள் தோறும் கணினி லேப் வசதியுள்ள கல்லுாரி மையங்களை தேர்வு செய்து அங்கு தேர்வர்களை வரவழைத்து கணினி மூலம் எழுத வைக்கிறது.தீர்க்கப்படாத குறைகள்
இத்தேர்வுக்கு பாடம்வாரியாக மையங்கள் ஒதுக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நடந்த தேர்வில் கூட சர்வர் பிரச்னை, அடிப்படை வசதிகள் இல்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுபோன்ற குறைபாடுகளை தெரிவிக்க தேர்வர்களுக்கு எவ்வித வழியும் இல்லை. மாவட்ட நோடல் அதிகாரி கூட நியமிப்பதில்லை. இதனால் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்ற விவரம் கூட வெளியில் தெரிவதில்லை. இத்தேர்வு கடினம் என்பதால் பலமுறை இத்தேர்வை எழுகின்றனர்.5 ஆண்டுகள் ஏமாற்றம்
நெட் தேர்வு கடினம் என்பதால் அதற்கு இணையாக மாநில அரசு நடத்தும் செட் தேர்வை பலர் ஆர்வமுடன் எழுதி தகுதியை ஏற்படுத்திக்கொள்வர். 2018 ல் கொடைக்கானல் தெரசா பல்கலை சார்பில் செட் தேர்வை தமிழக அரசு நடத்தியது. அதன்பின் 5 ஆண்டுகளாக நடத்தவில்லை. இதனால் பலர் வேலை வாய்ப்புக்கான தகுதியை பெற முடியாமல் தவிக்கின்றனர்.பேராசிரியர்கள் கூறியதாவது: 
நாற்பதுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் இத்தேர்வுகள் நடக்கின்றன. ஆண்டு தோறும் செட் தேர்வை 70 ஆயிரத்திற்கும் மேல், நெட் தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் எழுதுவர். பிஎச்.டி., படிக்க குறைந்தது 5 ஆண்டுகள் லட்சங்களில் பணம் தேவை. நெட் தேர்ச்சி பெறுவது சற்று கடினம். எனவே உதவி பேராசிரியர், விரிவுரையாளர்கள், கவுரவ விரிவுரையாளர் பணிக்கு பெரும்பாலும் செட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவர். 2017ல் இத்தேர்வில் தேர்ச்சி பெற ரூ.4 லட்சம் வரை பணப் பேரம் நடந்ததாக முறைகேடு புகார் எழுந்தது.அதற்கேற்ப திருவள்ளூரில் ஒரே பாடப்பிரிவை சேர்ந்த 200 பேர் தேர்ச்சி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2018 க்கு பின் இத்தேர்வு நடத்த அண்ணாமலை பல்கலைக்கு நோடல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது முதல் செட் தேர்வை நடத்த தமிழக அரசு முன்வரவில்லை. விரைவில் நடத்த வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us