தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறனில்லாத பட்டதாரிகள்: கவர்னர் ரவி கவலை

திறனில்லாத பட்டதாரிகள்: கவர்னர் ரவி கவலை

திறனில்லாத பட்டதாரிகள்: கவர்னர் ரவி கவலை


UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM

ADDED : ஜூன் 23, 2023 04:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2023 12:00 AM ADDED : ஜூன் 23, 2023 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திறன் இல்லாததால் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை எனவும், இளங்கலை பட்டம் முடித்த 70 சதவீத பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது எனவும் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: 
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற பதிலே வருகிறது. தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கேட்ட போது தொழிலதிபர்கள் அதிர்ச்சி தரும் பதிலை தருகிறார்கள். பொறியியல் படித்த 80 சதவீத முதல் 90 சதவீத மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால் 80 சதவீத முதல் 90 சதவீத பொறியியல் படித்தவர்களுக்கு வேலை இல்லை. பணியமர்த்தும் போது பட்டப்படிப்பை விட தனித் திறனையே தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன. இளங்கலை பட்டம் முடித்த 70 சதவீத பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. பட்டப்படிப்பில் வரலாறு படிப்பவர்களுக்கும், அறிவியல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளதுஇந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். தேசிய கல்வி கொள்கை ஒரு புரட்சிகரமான கல்விக் கொள்கை ஆகும். இதனால் ஏராளமான பட்டதாரிகளை உருவாக்க முடியும். தேசிய கல்வி கொள்கை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டதல்ல, கோடிக்கணக்கான மக்களால் உருவானது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us