தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை, பொள்ளாச்சியில் இன்று தினமலர் வழிகாட்டி

கோவை, பொள்ளாச்சியில் இன்று தினமலர் வழிகாட்டி

கோவை, பொள்ளாச்சியில் இன்று தினமலர் வழிகாட்டி


UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM

ADDED : ஜூன் 24, 2023 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM ADDED : ஜூன் 24, 2023 09:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்- 2023 வழிகாட்டி நிகழ்ச்சி, கோவையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கிலும், பொள்ளாச்சியில் மாதவா இன் ஹோட்டலிலும் இன்று நடக்கிறது.மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும், நிபுணர்களிடம் இருந்து நேரடியாக விளக்கம் பெறலாம். உயர்கல்வி குழப்பங்களுக்கு, இந்நிகழ்ச்சியில் தெளிவான விடை கிடைக்கும் என்பதால், மாணவர்களே, பெற்றோரே... தவற விட்டு விடாதீர்கள்! பிளஸ் 2க்கு பின் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது, எந்த கல்லுாரி, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள், தொழில்துறையில் வந்துள்ள புதிய மாற்றங்கள், உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2023 வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம் பெறலாம்.இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை, கட்-ஆப், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜி., துறைகள் என பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி? என்ற தலைப்பில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசுகிறார். இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் விளக்கம் அளிக்கிறார். இந்நிகழ்ச்சியை, கற்பகம் உயர்கல்வி நிறுவனம் இணைந்து நடத்துகிறது. முன்பதிவிற்கு www.kalvimalar.com இணையதளத்திலோ அல்லது 91505 74441 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us