தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரவரிசை பட்டியல்: அழகப்பா பல்கலை முதலிடம்

தரவரிசை பட்டியல்: அழகப்பா பல்கலை முதலிடம்

தரவரிசை பட்டியல்: அழகப்பா பல்கலை முதலிடம்


UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM

ADDED : ஜூன் 24, 2023 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM ADDED : ஜூன் 24, 2023 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய பல்கலை தரவரிசை பட்டியலில் 111வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தால் ஆசிய பல்கலை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.928க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அழகப்பா பல்கலை 111 வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து பங்கேற்ற உயர் கல்வி நிறுவனங்களில் 6வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. அழகப்பா பல்கலை தரவரிசை பிரிவின் இயக்குனர் ஜெயகாந்தன் மற்றும் குழுவினர் தரவுகளை சேகரித்து சமர்ப்பித்தனர். மேலும் தேசிய தர நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட ஏ பிளஸ் அங்கீகாரம், தேசிய மனித வளத்துறை வழங்கும் தரவரிசையில் 30வது இடம் பெற்றுள்ளது.டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் உலக தரவரிசையில் 401 - 500 வது பிரிவிலும், இளம் பல்கலை உலகத் தரவரிசையில் 138 வது இடமும், க்யு. எஸ். நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய அளவிலான தரவரிசை பட்டியலில் 251- 260 வது பிரிவிலும், தெற்காசிய அளவிலான தரவரிசையில் 51 வது இடமும் பெற்றுள்ளது. பல்கலை யை தரவரிசை பட்டியலில் இடம் பெறச் செய்த பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களை துணைவேந்தர் க.ரவி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us