தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடற்கல்வித்துறைக்கு தனி இணை இயக்குநர் வேண்டும்

உடற்கல்வித்துறைக்கு தனி இணை இயக்குநர் வேண்டும்

உடற்கல்வித்துறைக்கு தனி இணை இயக்குநர் வேண்டும்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டுள்ள உடற்கல்வித்துறைக்கு தனியாக உடற்கல்வி இணை இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும்.தமிழகத்தில் மிகக்குறைந்த பள்ளிகளில் தான் என்.எஸ்.எஸ்., பிரிவு செயல்படுகிறது. அதற்குரிய இணை இயக்குநரே உடற்கல்வித்துறைக்கும் இருப்பதை மாற்றி எங்களுக்கு தனியாக பதவியிடம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை உடற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநில செயலாளர் நெடுமாறன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:
பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு உள்ளதைப் போல 6 முதல் 8 ம் வகுப்பு வரைக்கும் இடைநிலை உடற்கல்வி ஆசிரியர் எனவும், 9, 10ம் வகுப்பிற்கு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு முதுநிலை உடற்கல்வி ஆசிரியர் என 2007 ல் பெயர் மாற்றம் செய்வதாக கூறப்பட்டது. 15 ஆண்டுகளாகியும் இன்றுவரை பதவி பெயர்மாற்றம் செய்யவில்லை. இந்தாண்டிலாவது இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மிகக்குறைந்த அளவிலேயே என்.எஸ்.எஸ்., பிரிவு உள்ளது. அதற்கென தனியாக ஒரு இணைஇயக்குநர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டது உடற்கல்வித்துறை. அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அப்படியிருந்தும் தனியாக ஒரு இணை இயக்குநர் பணியிடம் உருவாக்கவில்லை. மாவட்ட உடற்கல்வி இயக்குநர் முதல் முதன்மை உடற்கல்வி இயக்குநர் வரை அனைத்து பதவிகளுமே இதுவரை பொறுப்பு நிலையில் தான் இருந்தது. இப்போது தான் ரெகுலர் பணியிடங்கள் கொண்டு வரப்பட்டது. எனவே எங்களது சங்க கோரிக்கைகளை நேரடியாக தெரிவிப்பதற்கு உடற்கல்வித்துறைக்கென இணை இயக்குநர் இருக்க வேண்டும்.அமைச்சர் மகேஷ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எங்கள் சங்க பிரதிநிதிகள் அமைச்சரை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். இதற்கு செவிசாய்த்து உடனடியாக இணைஇயக்குநர் பணியிடம், பதவி பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us