UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 04:31 AM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி சார்பில், சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார். பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், போதைப் பொருளால் ஏற்படும் சமூக சீரழிவுகள் குறித்து விளக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் துவங்கிய பேரணி ரயில்வே பீடர் ரோடு வழியாக ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில், மாருதி கல்லூரியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.பேரணியின் போது, போதை பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில், மாருதி கல்லூரி செயலாளர் சுவாமி வீரகானந்தாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நீதி ராஜா செய்து இருந்தார். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் பங்கேற்றனர். இவர்களிடமும் ரயில் வளாகத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களிடம், தூய்மை பணியாளர் ஆகியோரிடம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன், போதை பொருட்களினால் ஏற்படும், சமூக சீர்கேடுகளை பற்றியும், அதை பயன் படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு நிலை குறித்தும், விளக்கிப் பேசினார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே போலீசார், பயணிகள் பங்கேற்றனர்.
