தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய விரிவுரையாளர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங்

புதிய விரிவுரையாளர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங்

புதிய விரிவுரையாளர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங்


UPDATED : ஜன 02, 2010 12:00 AM

ADDED : ஜன 02, 2010 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2010 12:00 AM ADDED : ஜன 02, 2010 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்காக, போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 139 விரிவுரையாளர்களில், 132 பேருக்கான பணி நியமன கவுன்சிலிங், சென்னையில் ஜனவரி 4ம் தேதி நடக்கிறது.


இது குறித்து, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் கூறியிருப்பதாவது:
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் காலியாக இருந்த விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தி 139 பேரை தேர்வு செய்துள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஏழு பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 132 பேரை பணி நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி., ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 4ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். அன்றைக்கே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். இவ்வாறு இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us