தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அறிவுரை

பள்ளிகளுக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அறிவுரை

பள்ளிகளுக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அறிவுரை


UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM

ADDED : ஜூன் 28, 2023 04:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM ADDED : ஜூன் 28, 2023 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
தவறு செய்யும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், கடுமையான தண்டனைகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். வேறு வழியில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா அறிவுரை கூறியுள்ளார்.குடகின் மடிகேரியில் உள்ள பிரபல பள்ளியில் உள்ள ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் தண்ணீர் பாட்டிலில் மது கலந்து பள்ளிக்கு கொண்டு சென்றதாக 2022 அக்டோபரில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பள்ளியில் இருந்து அவர் 21 நாட்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பள்ளியில் நடந்த தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. பெற்றோர் தலையீட்டால் வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இதற்காக 2022 அக்டோபர் 24ம் தேதி காலை 10:10 மணி முதல் 12:30 மணி வரை கணினி முன்பு மாணவர் அமர்ந்திருந்தார். ஆனால் பள்ளி நிர்வாகம் வினாத்தாள் அனுப்பவில்லை. மனம் நொந்த மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.மகன் சாவுக்கு பள்ளி நிர்வாகமே முழு காரணம் என்று கூறி தந்தை தாதா கரும்பையா, தாய் கவுரம்மா ஆகியோர் போலீசில் புகார் செய்தனர். குடகு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. போலீசார் பள்ளி மீது தவறில்லை என்று பி அறிக்கை சமர்பித்தது. இதை நீதிமன்றமும் ஏற்றுகொண்டு, ஆதாரம் இல்லை என்று இந்தாண்டு மே 16ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பள்ளியின் செயல்பாடு குறித்து முழுமையாக விசாரிக்காமல், பி அறிக்கை தாக்கல் செய்தது ஏற்றுகொள்ளப்படாது. இதுபோன்ற வழக்குகள் எதிர்மறையான சுய மதிப்பீட்டிற்கு வழிவகுக்கும். இதனால் குழந்தைகள் தங்களை பற்றி தவறாக நினைக்கின்றனர். எனவே கல்வி நிறுவனங்கள் கடுமையான தண்டனைகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். வேறு வழியில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இது இளம் ஆன்மாக்களின் உயிரைக் காப்பாற்றும். பழைய கொள்கைகள் இப்போது மாறிவிட்டன என்பதை கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் பிரச்னை செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, இடைநீக்கம் மற்றும் வெளியேற்றம் போன்ற அதிகப்படியான ஒழுங்கு நடவடிக்கைகள் உதவாது.இவ்வாறு நீதிபதி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us