தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மைய நுாலகத்துக்கான மதிப்பீடு பணி தீவிரம்

மைய நுாலகத்துக்கான மதிப்பீடு பணி தீவிரம்

மைய நுாலகத்துக்கான மதிப்பீடு பணி தீவிரம்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான மைய நுாலகம், செங்கல்பட்டில் இயங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பிரிந்ததற்கு பின், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என தனியாக மைய நுாலகம் அமைக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், 2022-23 தமிழக பட்ஜெட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மைய நுாலகம் கட்ட, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், காஞ்சிபுரத்தில் நுாலகம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணிகள் மெத்தனமாக நடந்தது. வையாவூர் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை, நுாலகத்துக்கு வழங்க வேண்டும் என, நுாலகத் துறை சார்பில் கேட்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்துக்கு ஈடாக, 1 கோடி ரூபாய், நுாலகத் துறை வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டது. இதனால், வையாவூர் அருகே, நுாலகம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது. வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளதா என தேடப்பட்ட நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகிலேயே, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிரே, 34 சென்ட் நிலம் தேர்வு செய்து, நுாலகத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் நான்கு மாதங்களுக்கு முன் வழங்கியது. இதையடுத்து, மைய நுாலகம் கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுப்பணித் துறை மதிப்பீடு தயாரிக்கும் பணியில் உள்ளதாக நுாலகத் துறை தெரிவித்து உள்ளது.இதுகுறித்து நுாலகத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் உள்ளனர். கிண்டியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இருந்து மதிப்பீடு விபரம் வந்தவுடன், டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கும். நுாலகம் கட்டும் இடத்தில் கல் நடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us