UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 10:25 AM
பல்கலையில்., உதவி பேராசிரியர் பணி நியமனத்திறான புதிய அறிவிப்பை யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.உதவி பேராசிரியர்கள் பணிக்கு நேரடியாக நியமிக்கப்படுபவர்கள் பி.ஹெச்டி முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாக உள்ளது. ஜூலை 1, 2021 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த விதி தற்போது ஜூலை 1, 2023 வரை நீட்டிக்கப்பட்டடுள்ளது. பி.ஹெச்டி முடிக்காவதவர்கள் யு.ஜி.சி.,ன் நெட்/ஸ்லெட்/செட் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட தகுதியானவர்கள் என யு.ஜி.சி., தற்போது அறிவித்துள்ளது. பி.ஹெச்டி முடித்தவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளை முடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் நேரடியாக பணிக்கு நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு யு.ஜி.சி., வெளியுட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
