தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகளில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகளில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 09:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
மொபைல்போனில் மோசடியான லிங்க் அனுப்பி அடிப்படை தகவல்களை பெற்று வங்கி கணக்கில் பணம் திருடுவது; வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவது என, பல்வேறு மோசடிகள் நடக்கின்றன.ஆண்டுதோறும், அரசு, தனியார் பள்ளிகளில் இணையவழி குற்றங்களைத் தடுத்தல் என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. கலெக்டர் உத்தரவுப்படி, உடுமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வரும் 10ம் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், நடப்பு கல்வியாண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதந்தோறும் நடத்தப்படும். குறிப்பாக, ஓவியம், பேச்சு, கதை சொல்லுதல், பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us