UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM
ADDED : ஜூலை 08, 2023 09:34 AM
கர்நாடகா:
தேசிய கல்வி கொள்கை மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என கர்நாடக அரசு பட்ஜட்டில் அறிவிப்பு.பட்ஜெட் அறிவிப்பு:
* பல்வேறு மதம், மொழி, கலாசாரம் கொண்ட நாட்டுக்கு, ஒரே விதமான கல்வி நடைமுறை பொருந்தாது. மாநிலத்தின் கவுரவத்தை உயர்த்தும் விதமாக, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் உயர் கல்வியை அளிக்க வேண்டும்.* இதன் மூலம் அவர்களை சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் உயர்த்தும், புதிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும். தேசிய கல்வி கொள்கை மாநிலத்தில் அமல்படுத்தப்படாது.* பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லுாரியில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, தரம் உயர்த்த 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.* போலியான மதிப்பெண் சான்றிதழ் பெறுவதை தவிர்க்கும் நோக்கில், அனைத்து உயர் கல்வி மாணவர்களும், &'அகாடமி பேங்க் ஆப் கிரெடிட்ஸ்&' ல் பதிவு செய்து, டிஜிட்டல் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும்.* மாணவர்கள் நலன் கருதி, உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 13 ஆயிரத்து 169 மாணவர்கள் விடுதிகள், சமூக நலத்துறை, பிற்படுப்பத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்படும்.பல்கலைக்கு ரூ.50 லட்சம்* சிறந்த பல்கலைக் கழகங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பான சாதனை செய்யும் பல்கலைக் கழகங்களுக்கு, தலா 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.* மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களில், பி.எச்.டி., சீட்களை நிரப்ப, ஒரே விதமான நடைமுறை கொண்டு வரப்படும். அரசு பல்கலைக்கழகங்களின் அனைத்து சீட்கள், தனியாரில் 40 சதவீதம் சீட்களை நிரப்ப, கவுன்சிலிங் நடத்தப்படும்.* மாநிலத்தின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில், ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.* உயர் கல்வி பெறுவதில் மொழி பிரச்னை இடையூறாக இருப்பதை தவிர்க்க, கர்நாடகாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கன்னடத்தில் தேர்வெழுத வசதியாக, பாடங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
