தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM

ADDED : ஜூலை 08, 2023 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM ADDED : ஜூலை 08, 2023 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால், 456 இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக துவங்கி, கடந்த மூன்று நாட்களாக பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை அறிவிப்பால் நேற்று, ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, அவலாஞ்சி, 204 மி.மீ; அப்பர்பவானி, 110 மி.மீ; சேரங்கோடு, 93 மி.மீ., என மழையளவு பதிவாகி உள்ளது. சராசரி மழையளவு 38.18 மி.மீ., ஆகும். தொடரும் மழையால் மின் உற்பத்திக்கு பயன்படும் அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மரம் விழுந்து பாதிப்பு
மஞ்சூர், ஊட்டி, கூடலுார், பந்தலுார், அவலாஞ்சி பகுதிகளில் நள்ளிரவில், 7 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலுார், ஊட்டியில் இடங்களில் வீடுகளின் மேற்கூரை, பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, மின் வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலை, 9:00 மணிக்கு போக்குவரத்து சீரானது.படகு சவாரி ரத்து
ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்ட படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகு மட்டும் இயக்கப்பட்டன. தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், கன மழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில், 456 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக முகாமுக்கு வர அந்தந்த பகுதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பெரியளவிலான பாதிப்பு இல்லை, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us