தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., கட்-ஆப் உயர வாய்ப்பு

எம்.பி.பி.எஸ்., கட்-ஆப் உயர வாய்ப்பு

எம்.பி.பி.எஸ்., கட்-ஆப் உயர வாய்ப்பு


UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM

ADDED : ஜூலை 17, 2023 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM ADDED : ஜூலை 17, 2023 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளின் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பொதுப்பிரிவினருக்கு 20 மதிப்பெண்ணும், ரிசர்வ்டு பிரிவினருக்கு 40 மதிப்பெண்களும் உயரக்கூடும் எனக் கணிக்கிடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 29 மாணவர்கள் 700 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்துள்ளானர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 650 மதிப்பெண்ணிற்கு மேல் 199 பேர் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 379 பேர் 650க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 6 ஆயிரத்து 449 பேர் 500க்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.கல்வியாளர் கூறுகையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் தற்போது 600ஆக உள்ள கட்-ஆப் மதிப்பெண் குறைந்தது 20 மதிப்பெண் உயரலாம் எனவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 25 மதிப்பெண்கள் உயரலாம் என்றும் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us