தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னாட்சிக்கு பாதகமின்றி பொது பாடத்திட்டம்: பொன்முடி

தன்னாட்சிக்கு பாதகமின்றி பொது பாடத்திட்டம்: பொன்முடி

தன்னாட்சிக்கு பாதகமின்றி பொது பாடத்திட்டம்: பொன்முடி


UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM

ADDED : ஜூலை 26, 2023 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM ADDED : ஜூலை 26, 2023 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது அறிக்கை:
கடந்த, 2018 - 19க்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில், பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. தமிழக சட்டசபையில், உயர்கல்வித்துறை அமைச்சர், 2021, ஆக.,26ல் அறிவித்தபடி, பாடத்திட்ட மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாடப்பிரிவுகளுக்கு இடையே அரசு பணிக்கான இணைத்தன்மை இல்லாததால், அதற்கு உதவும் வகையில், பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.ஐ.ஐ.டி., - அண்ணா பல்கலை, 10 கலை அறிவியல் பல்கலைகள், தன்னாட்சி கல்லுாரிகள் போன்றவற்றில் இருந்து, 922 பேராசிரியர்களை பாடத்திட்ட குழு உறுப்பினர்களாக வைத்து, 870 பாடத்திட்ட குழு கூட்டம் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனை பெறப்பட்டு உள்ளது. இதில், 166 இளநிலை மற்றும் 135 முதுநிலை பாடங்களுக்கு, திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மாதிரி பாடத்திட்டங்களை, 90 சதவீத உயர்கல்வி நிறுவனங்கள்நடைமுறைப்படுத்தி உள்ளன.இந்த பாடத்திட்டத்தால்,பல்கலைகள், தன்னாட்சிகல்லுாரிகளின் உரிமைகள் பாதிக்கப்படாது. முக்கிய பாடங்களையும், விருப்ப பாடங்களையும், செய்முறை பயிற்சிகளையும், செமஸ்டர்களுக்கு இடையே மாற்றி கொள்ளலாம். பல்கலைகள், தன்னாட்சி கல்லுாரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதில், நடைமுறை சிக்கல்கள் இருந்தால், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து பேசி சரி செய்யப்படும். இதுகுறித்து, தன்னாட்சி கல்லுாரி முதல்வர்களுடன், வரும் 2ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும்.இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us