UPDATED : ஜன 09, 2010 12:00 AM
ADDED : ஜன 09, 2010 01:42 PM
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் சுப்பையா, பொதுச் செயலர் விஜயகுமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 25 ஆண்டுகளாக முதுநிலை பட்டதாரி, ஆசிரியர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றும் நிலை உள்ளது.
இதற்கான அரசாணை 720ல் உரிய திருத்தம் செய்து, பதவி உயர்வு அளிக்க வேண்டும்.மேல்நிலை கல்விக்கு என தனியாக இயக்குனரகம் அமைக்க வேண்டும். மத்திய அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக எங்களுக்கும் வழங்க வேண்டும்.
கடந்த எட்டு ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 850 மேல்நிலைப்பள்ளிகளில், கலை பாடப்பிரிவுகள் துவங்க வேண்டும். அதில், 10 முதுநிலை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும்.மருத்துவ காப்பீடு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்காமல், தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சமச்சீர் கல்வியில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதுடன், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
