தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நகர்ப்புற பிரச்சினைகளுக்காக புதிய பல்கலை உருவாகிறது!

நகர்ப்புற பிரச்சினைகளுக்காக புதிய பல்கலை உருவாகிறது!

நகர்ப்புற பிரச்சினைகளுக்காக புதிய பல்கலை உருவாகிறது!


UPDATED : ஜன 09, 2010 12:00 AM

ADDED : ஜன 09, 2010 03:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2010 12:00 AM ADDED : ஜன 09, 2010 03:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டிலேயே நகர்ப்புறம் தொடர்பான பிரச்சினைகளுக்காக புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹீயூமன் செட்டில்மெண்ட்ஸ் (ஐ.ஐ.எச்.எஸ்.,) உதவியுடன் தனியார் நிதியுதவியுடன் இந்த புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது.
 
நேஷனல் இனவேஷன் யுனிவர்சிட்டி என்ற பெயரில் இயங்கும் இந்த புதிய பல்கலைக்கழகம் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்தர பல்கலைக்கழகங்களுக்கு நிகராகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுனிக் ஐடென்டிபிகேஷன் நம்பர் திட்ட தலைவர் நந்தன் நீல்கேனி, தொழிலதிபர்கள் கேஷப் மஹிந்தரா, ஜாம்சைட் கோத்ரேஜ், தீபக் பரேக், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகன் உள்ளிட்டோர் இந்தப் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த புதிய பல்கலைக்கழகத்தில் அர்பன் பிராக்டிஸ் துறையில் நான்கு ஆண்டு படிப்பு தொடங்கப்படும். அடுத்த ஆண்டில் அதே துறையில் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்று ஐ.ஐ.எச்.எஸ்., இயக்குநர் அரோமர் ரெவி தெரிவித்தார். 2013ம் ஆண்டு வாக்கில் பிஎச்.டி., பட்டப் படிப்பும் தொடங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us