UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 09:31 AM
சாம்ராஜ் நகர்:
எலந்துாரில் கடந்த வாரம் 9 வயது மாணவர், சிறுத்தையால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, வனத்துறை ஊழியர்கள் முன் வந்துள்ளனர்.சாம்ராஜ் நகர் மாவட்டம், எலந்துாரில் மல்லிகேஹள்ளியில் 105 பேரும், கட்டேவாடியில் 50 பேரும், கே.ஓசூரில் 27 மாணவ - மாணவியரும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த வாரம், 9 வயது மாணவரை சிறுத்தை தாக்கியது. மாணவரின் கூச்சலை கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், தப்பியோடியது. இதனால், பள்ளி செல்வதற்கு மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.இதையறிந்த வனத்துறையினர், மாணவர்களை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்லவும், மீண்டும் வீட்டில் விடவும் முன் வந்துள்ளனர். மண்டல வன அதிகாரி லோகேஷ் மூர்த்தி கூறுகையில், கிராமங்களுக்கு சென்று, வீடுகளின் முன் குப்பையை வீச வேண்டாம்; கால்நடைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கிராமத்தினரிடம் கூறியுள்ளேன். சிறுத்தை தென்பட்டால் படமோ, வீடியோவோ எடுக்க வேண்டாம், என்றார்.
