UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 05:49 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பள்ளிக் கல்வியின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, நாளை முதல் இரண்டு நாட்கள், மதுரையில், கருணாநிதி நுாற்றாண்டு நுாலக கட்டட அரங்கில், ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், முதன்மை செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, இயக்குனர்கள் கண்ணப்பன், நாகராஜ முருகன், பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், மாணவர் சேர்க்கை விபரம், அரசின் நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து, விரிவாக விவாதித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
