UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 06:22 PM
வானுார்:
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் உள்ள மாத்திர் மந்திர், பாரத் நிவாஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட, ஆக., 8ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆரோவில் வருகை தருகிறார்.இதையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பவுண்டேஷன் ஹாலில் நடந்தது. கலெக்டர் பழனி, ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி., பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மத்திய உளவுத்துறை எஸ்.பி., ஜோஷி வர்கீஸ், எஸ்.பி., சசாங்சாய், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில், கடலுார் மாவட்ட கியூ பிரான்ச் டி.எஸ்.பி., சுரேஷ் கண்ணன், வானுார் பி.டி.ஓ., நடராஜன், தாசில்தார் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆரோவில் பாதுகாப்பை பலப்படுத்துவது, 1,200 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, 7 மற்றும் 8ம் தேதிகளுக்கு ஆரோவில் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
