தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர்

அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர்

அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர்


UPDATED : ஆக 05, 2023 12:00 AM

ADDED : ஆக 05, 2023 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2023 12:00 AM ADDED : ஆக 05, 2023 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
கல்வி அதிகாரிகளாகிய உங்களை யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்லிவிடாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என, மதுரையில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.மதுரை கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில் மாநில அளவில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் இயக்குனர் அறிவொளி, கண்ணப்பன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் மகேஷ் பேசியதாவது: 
தமிழகத்தில் 64 சட்டசபை தொகுதிகளில் உள்ள பள்ளிகளில் 74 வகை செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இத்துறையின் நடைமுறை சிக்கல்களை அதிகாரிகள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். தவறுதலான சுற்றறிக்கை வெளியான பின்புதான் அதன் தாக்கம் தெரிகிறது. இத்துறை தொடர்பாக நாளிதழ்களில் வெளியாகும் பாராட்டு, குறைகள், விமர்சன செய்திகள் குறித்து அதிகாரிகள் ஆவணப்படுத்த வேண்டும். குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளதா என்பதை விளக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் போது உரிய சப்போர்ட் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விரல் நீட்டி உங்களை (அதிகாரிகள்) யாரும் குற்றம் சொல்லும் வகையில் நடந்து கொள்ள கூடாது, என்றார்.கூட்டத்தில், பள்ளிகளில் அடிப்படை பணியாளர் நியமனம், சட்ட அதிகாரி நியமனம், நலத் திட்டப் பொருட்களை பள்ளிகளுக்கு சப்பளை செய்வது, அதிகாரிக்கான குடியிருப்புகள், புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகள் தெரிவித்தனர். 49 தலைமையாசிரியர்களுக்கு டி.இ.ஓ., பதவி உயர்வு உத்தரவுகளை அமைச்சர்கள் மூர்த்தி, மகேஷ் வழங்கினர்.கன்னியாகுமரி முதலிடம்
இந்தாண்டு சிறப்பாக செயல்பட்ட சி.இ.ஓ.,க்கள் கன்னியாகுமரி முருகன், பெரம்பலுார் மணிவண்ணன், துாத்துக்குடி ரஜினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் பள்ளி பராமரிப்பு நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us