தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி

சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி

சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி


UPDATED : ஆக 11, 2023 12:00 AM

ADDED : ஆக 11, 2023 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2023 12:00 AM ADDED : ஆக 11, 2023 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ், இயங்கும் அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையத்தில், அகில இந்திய குடிமைப்பணி முதல்நிலை தேர்வு எழுதுபவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு, ஆர்வமுள்ளவர்கள், 17ம் தேதிக்குள் இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, பாரதியார் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை பாரதியார் பல்கலையின் கீழ், அண்ணா நுாற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி மையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இங்கு சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் வாயிலாக, இனவாரி ஒதுக்கீடு வாயிலாக, 100 பேர் மட்டும் தேர்வு செய்து பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தை, நான் முதல்வன் திட்டத்துடன் இம்மையத்தை இணைத்துள்ளது. இதன் படி, மாநில அளவில், 1000 பேருக்கு மாத ஊக்கத்தொகை, ரூ.7,500 பத்து மாதங்கள் அரசால் வழங்கப்பட்டு பயிற்சியும், இலவசமாக வழங்கப்படவுள்ளது. மதிப்பீட்டு தேர்வு அடிப்படையில், பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் பயிற்சி மையத்தில், 100 பேர் சேர்க்கப்படுவார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். விதிமுறைகள், நான் முதல்வன் திட்டம் குறித்த முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள, நான் முதல்வன் இணையதளத்தை பார்க்கலாம். மதிப்பீட்டு தேர்வுக்கு, வரும், 17ம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us