தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

முதல்வர் திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஆக 11, 2023 12:00 AM

ADDED : ஆக 11, 2023 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2023 12:00 AM ADDED : ஆக 11, 2023 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த, நடப்பு (2023 - 24) கல்வியாண்டு முதல், தமிழக முதல்வர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள, பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும், 60 கேள்விகள் இடம் பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள், 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள், 60 இடம் பெறும். முதல் தாள் காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம், 2:00 முதல், மாலை, 4:00 மணி வரையும் நடக்கும்.நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி, 500 மாணவர்கள், 500 மாணவியர் வீதம், ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் வீதம், கல்வியாண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய், இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். நடப்பாண்டுக்கான தேர்வு செப்., 23ம் தேதி தேர்வு நடக்கும். பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும், 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகையாக, 50 ரூபாய் சேர்த்து, மாணவர் பயிலும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us